தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்துக் கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம்

 


திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன், பேராசிரியையாக பணிபுரிந்து வரும் இவர் கணவரைப் பிரிந்து தனது மகன் தர்ஷனுடன் வாழ்ந்து வருகிறார். 

இந்நிலையில், திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ஓவியர் ஆதிஸ் என்பவரை திருமணம் செய்ய முடிவெடுத்த சுபாஷினி ராஜேந்திரன், திருமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயிலில் வைத்து குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். 

இந்தத் திருமணத்தின்போது, மணப்பெண் சுபாஷினியின் மகன் தர்ஷன் தாலி எடுத்துக் கொடுக்க, ஆதிஸ் அதை சுபாஷினியின் கழுத்தியில் கட்டினார். இந்த நிகழ்வு அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, பெரியார் படத்தின் முன்பாக மாலை மாற்றிக் கொண்டனர். இத்திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments