குப்பையில் கிடந்த தங்கத்தை ஒப்படைத்த மேரிக்கு பாராட்டு

 சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மேரி, அதே பகுதியில் மாநகராட்சி தூய்மை பணியாளாராக பணியாற்றி வருகிறார்.  ஊழியர்கள் குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில்  ஈடுபட்டனர். அப்போது தூய்மை பணியாளர் மேரியின் கையில் தங்க நாணயம் சிக்கியது. அதனைக்கண்ட மேரி உடனடியாக உயரகதிகாரிக்கு தகவல் கொடுத்தார்.

துாய்மை பணியாளர் மேரி cleaner marry

மேலதிகாரி கவுதம், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே, திருவொற்றியூர் அண்ணாமலை நகரை சேர்ந்த தனியார். நிறுவன ஊழியரான கணேஷ்ராமன் என்பவரின் மனைவி, ஆயுத பூஜைக்காக வீட்டை சுத்தம் செய்தபோது தங்க நாணயத்தையும் சேர்த்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார். இதுகுறித்து தூய்மை பணியாளர்களிடம் தகவல் தெரிவித்த கணேஷ், சாத்தாங்காடு காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

கணேஷ்  காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு தூய்மை பணியாளர் மேரியின் கைகளால், அவருக்கு சொந்தமான 100 கிராம் தங்க நாணயம் ஒப்படைக்கப்பட்டது.  

குப்பையில் கிடந்த, தங்க நாணயத்தை மீட்டு, போலீசாரிடம் நேர்மையாக ஒப்படைத்த, துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்

Post a Comment

0 Comments