வீட்டில், நண்பரின் மகனை வேலைக்கு வைத்திருந்தார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
அவர் ஒருமுறை, பணப் பெட்டியிலிருந்து, 200 ரூபாய் எடுத்து விட்டார். கணக்கு பார்த்தபோது பணம் குறைந்தது. பின் எடுத்து அவர்தான் என்பது தெரிந்தது,
படித்தவன், அத்துடன் நண்பனின் மகன் என்பதால், அவரை அழைத்த, என்.எஸ்.கே., 'கணக்குப்பிள்ளையை மாட்டி விடத்தானே நீ பணத்தை எடுத்தாய். படித்தவன் நீயே இப்படி செய்யலாமா...
'உன் தந்தையோ மானஸ்தன். அவனுக்கு இது தெரிந்தால், உயிரை விட்டு விடுவான்.
அதனால், உன்னை விரட்டி விடவும் மாட்டேன். இன்று முதல், வீட்டு வரவு - செலவுகளை நீயே கவனித்துக் கொள். பணம் குறைந்தால் நீதான் பொறுப்பு' என்று சொல்லி, பெட்டி சாவியையும், பணப்பையையும் அவனிடம் கொடுத்தார்.
அதன்பின், அந்த பொறுப்பை சரியாகவே செய்தார், அந்த நபர்.
0 Comments