கரடி முடி வாங்கினால் பணக்காரர் ஆகலாம்

 


ஒருமுறை, அம்பேத்கரும், அவர் நண்பரும், கல்கத்தா நகர வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, கரடியை வைத்து ஒருவன், 'கரடியின் ஒரு முடியை வாங்கினால் பணக்காரர் ஆகலாம்...' என்று, கூவிக்கூவி, விற்றுக் கொண்டிருந்தான். பலரும்  முண்டியடித்து  வாங்கிக்கொண்டிருந்தனர். அம்பேத்கரின் நண்பரும் ஒரு கரடி முடியை வாங்கிவிட வேண்டும் என்று, அவனை நெருங்கினார்,  

அவரை தடுத்த அம்பேத்கர், 'நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல். அப்புறம், அந்த முடியை வாங்குங்கள்...' என்றவர், 'நீ, எத்தனை முடி வாங்கினால் பணக்காரனாவாய்...' என்று கேட்டார்.

'ஒரே ஒரு முடி போதும்...' என்றார், நண்பர்.

'நீர் ஒரு முடி வாங்கினால் பணக்காரனாவாய், சரி. ஆனால், அந்த கரடியை வைத்திருக்கிறானே வியாபாரி, அவன் ஏன் பணக்காரன் ஆகாமல், அதை வைத்து பிழைப்பு நடத்துகிறான்...' என்று, கேட்டார், அம்பேத்கர்.

தன் தவறை உணர்ந்தார், நண்பர்.

Post a Comment

0 Comments